சிசிடிவியில் சிக்கிய கொள்ளையன்.
சிசிடிவியில் சிக்கிய கொள்ளையன்.

சிசிடிவிக்கு கருப்பு பெயிண்ட் அடித்து ஏடிஎம்மில் : ரூ.40 லட்சம் கொள்ளை: முகமூடிகள் அட்டூழியம்!

சிக்கோடியில் உள்ள இரண்டு ஏடிஎம் மையங்களில் முகமூடி கொள்ளையர்கள் ரூ.40 லட்சத்தைத் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கோடி
சிக்கோடி

கர்நாடகா மாவட்டம், பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகாவில் அங்காளியில் ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் மற்றும் அம்பேத்கர் நகரில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளன. இந்த ஏடிஎம்களில் நேற்று இரவு ரூ.40 லட்சம் திருடப்பட்டுள்ளது.

கொள்ளையன் (மாதிரி படம்)
கொள்ளையன் (மாதிரி படம்)

முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் ஏடிஎம் மையங்களை கியாஸ் கட்டர் மூலம் வெட்டிக் கொள்ளையடித்துள்ளனர். சிக்கோடி அம்பேத்கர் நகர் அருகே உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் இருந்து 23 லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணமும், சிக்கோடி தாலுகா அங்காளி கிராமத்தில் ஆக்சிஸ் வங்கி ஏடிஎம்மில் ரூ.17 லட்சமும் திருடப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏடிஎம்மையும் கொள்ளையர்கள் திருட முயன்றுள்ளனர் ஆனால் தோல்வியடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். குற்றவாளிகளை பிடிக்க 25 போலீஸார் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் வேணுகோபால் கூறுகையில்," திருடர்கள் கொள்ளைக்கு முன் ஏடிஎம்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை கருப்பு பெயிண்ட் பயன்படுத்தி மறைத்துள்ளனர். தொழில்முறை கொள்ளையர்கள் இந்த குற்றத்தில் ஈடுபட்டது போல் தெரிகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க சிக்கொட்டி டி.எஸ்.பி தலைமையில் 25 போலீஸார் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளையடிக்கப்படும் ஏடிஎம்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்படவில்லை. பாதுகாப்பு ஆட்கள் இல்லாத ஏடிஎம் மையங்களை குறிவைத்து இந்த கொள்ளையை நடத்தியுள்ளனர்” என்றார்.

கியாஸ் கட்டர் மூலம் ஏடிஎம் கதவைத் திறந்த கொள்ளையர்கள் கேமராவில் சிக்கியுள்ளனர். சிக்கோடியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி காட்சிகளில் குற்றவாளிகள் முகமூடிகள் மற்றும் கையுறைகள் அணிந்து ஏடிஎம் கதவை வெட்டுவது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் 2 ஏடிஎம்களில் இருந்து 40 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பெலகாவி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in