இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல்... 4 பேர் அதிரடி கைது!

இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம்
இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம்

சென்னை தி. நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் மதுபோதையில் வந்து, கற்கள், மதுபாட்டில் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், 6 நபர்களை பிடித்து மாம்பலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், 4 பேர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in