
கர்நாடக மாநிலம் உடுப்பியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 4 பேரை கொன்றுவிட்டு மாயமான நபரை போலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் திருப்தி நகர் பகுதியில் வீடு ஒன்றில் ஹசீனா என்பவர் தனது மகன் மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார். அவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் அருகில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது 4 பேரும் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பெயரில் போலீஸார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் 4 பேரும் கொலை செய்யப்பட்டு இருப்பதும் ஆனால் வீட்டில் இருந்த வேறு எந்த பொருட்களும் மாயமாகவில்லை என்பதும் தெரியவந்தது.
எனவே இந்த கொலை எதற்காக நடைபெற்றது என்பதை கண்டறிய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர் ஹசீனாவின் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.
வீட்டிற்கு வந்த அந்த நபர் ஹசீனாவுடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படும் நிலையில், இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!
வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!
மோடியை அலற வைத்த இளம்பெண்... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!
திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!