பரபரப்பு… அரசு பணிமனையில் தீ விபத்து! எலும்புக்கூடான பேருந்துகள்

பேருந்து  தீ விபத்து
பேருந்து தீ விபத்து

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு பேருந்து பணிமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேருந்துகள் எரிந்து சேதம் அடைந்தன.

பண்ருட்டி பணிமனையில் 15 காலாவதியான பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை ஏலம் விடப்பட்டன. ஏலம் விடப்பட்ட பேருந்துகளை உடைத்து அகற்றும் பணி பகல் நேரங்களில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை ஒரு பேருந்தில் திடீரென தீப்பற்றியது. பின்னர் அடுத்தடுத்து 4 பேருந்துகள் தீப்பிடித்து எரிந்தன. தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீ விபத்து
தீ விபத்து

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் 4 பேருந்துகள் எரிந்த சேதமடைந்தன.

இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்தினால் பண்ருட்டியில் அதிகாலையில் பெரும் பரபரப்பு நிலவியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in