
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள முதுமொத்தன் மொழி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி முருகன்(46). இவர் சொந்தமாக 150 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளை முதுமொத்தன் மொழி அருகே உள்ள பசுவழி கிராமத்தில் உள்ள நிலங்களில் மேய்ச்சலுக்கு விட்டு பின்னர் மந்தையில் அடைப்பது வழக்கம்.
கடந்த இரண்டு நாட்களாக சாரல் மழை பெய்வதால் விவசாயி முருகன் ஆடுகளை பெட்டைக்குளத்தில் உள்ள காடுகளில் மதியம் மேய்ச்சலுக்கு விட்டு பின்னர் இரவு மந்தையில் அடைத்து வைத்துள்ளார். இன்று காலை மீண்டும் மந்தைக்கு திரும்பி வந்து பார்த்த போது 35 ஆடுகள் கழுத்தில் நாய்கள் கடித்து கோரமான நிலையில் இறந்து கிடந்தன. இதைக்கண்டு முருகன் கடும் அதிர்ச்சியடைந்தார்.
ஆட்டு மந்தை கம்பி வேலிக்குள் இருந்ததால் நாய்கள் துரத்தும்போது ஆடுகளால் தப்பித்து செல்ல முடியவில்லை என தெரிகிறது. நாய்கள் ஆட்டு மந்தை அமைக்கப்பட்டிருந்த மரபட்டிகளை வாயால் கடித்து மந்தைக்கு உள்ளே சென்று ஆடுகளை கடித்து கொன்றது குறிப்பிடத்தக்கது.
35 ஆடுகள் போக இன்னும் பல ஆடுகளுக்கு கழுத்து மற்றும் இடுப்பு பகுதிகளில் நாய் கடித்ததால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இறந்த போன ஆடுகளின் மொத்த மதிப்பு இரண்டரை லட்சம் ரூபாய் எனவும், தன்னுடைய வாழ்வாதாரமே இந்த ஆடுகளை நம்பியிருந்ததாகவும் கூறும் முருகன், அரசு தனக்கு இழப்பீடு வழங்கி உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
வங்கிகளுக்கு பறந்த புதிய உத்தரவு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக உள்ளார்- அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!
யாரை ஏமாற்ற கூட்டம் நடத்துகிறீர்கள்?- ராமதாசுக்கு காடுவெட்டி குரு மகள் கேள்வி!
33 வருடம்... என் இதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது! அமிதாப்புடன் நடிக்கும் ரஜினி நெகிழ்ச்சி!