
மதுரை அருகே சினை மாடுகள் மூன்று விஷம் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள நல்லதேவன் பட்டியை சேர்ந்த பின்னியம்மாள் என்பவர் 3 பசு மாடுகளை வைத்து, பால் விற்பனை செய்து வந்தார். இவரது 3 பசு மாடுகளும் சினையாக இருந்த நிலையில், இன்னும் சில நாட்களில் கன்றுகளை ஈன்றெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து வழக்கம்போல் தோட்டத்தில் மேய்ச்சலுக்காக மாடுகளை அழைத்துச் சென்ற பின்னியம்மாள், இரவு பசுமாடுகளுக்கு தண்ணீர் வைத்துவிட்டு உறங்கச் சென்றார். அதிகாலையில் எழுந்து வந்து பார்த்தபோது 3 மாடுகளும், ஒரு ஆட்டுக்குட்டியும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து உடனடியாக போலீஸாருக்கும், கால்நடை மருத்துவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த கால்நடை மருத்துவர்கள் மாடுகளை பரிசோதித்தபோது, மாடுகள் அருந்திய குடிநீரில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், குடிநீரில் விஷம் கலந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மனிதர்களை கொல்ல வைக்கப்பட்ட விஷத்தை, மாடுகளுக்கு தவறாக வைத்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சினை மாடுகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ள சம்பவம், மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
முற்றுகிறது மோதல்... பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக பொன்முடி அறிவிப்பு!
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
பட்டத்து இளவரசியாக முடிசூடினார் 18 வயது லியோனார்!
தீபாவளிக்கு தெறிக்கப் போகுது... மதுப் பிரியர்கள் உற்சாகம்; நவ.10 முதல் புதிய ‘பீர்’ வகைகள் அறிமுகம்!