மாட்டிறைச்சிக்காக கால்நடைகள் திருட்டு... மூன்று பேர் கைது!

கைது
கைது

மாட்டிறைச்சிக்காக கால்நடைகளைத் திருடி கறியாக்கிய 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து 20 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பியில் ரசூல்பூர் காசி கிராமத்தில் வசிக்கும் சந்தர் படேலின் வீட்டிற்கு வெளியே கட்டி வைத்திருந்த 2 காளைகள் நேற்று முன்தினம் காணாமல் போயின. இது தொடர்பாக கோக்ராஜ் காவல் நிலையத்தில் சந்தர் புகார் செய்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது சங்கம் ஓட்டல் அருகே இரண்டு கால்நடைகளில் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் கால்கள் கிடப்பதாக போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இந்த நிலையில், அப்பகுதியில் சிலர் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்போவதாக போலீஸாருக்கு இன்று தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக ரியாஸ் அகமது, முகமது சலீம், அஃபக் கான் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அத்துடன் அங்கிருந்த 20 கிலோ மாட்டிறைச்சியை பறிமுதல் செய்தனர். அந்த இறைச்சி படேலின் வீட்டில் இருந்து திருடப்பட்ட காளைகளுக்குச் சொந்தமானது என்று போலீஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in