தண்டவாளத்தில் கட்டைகள்; மைசூரு ரயிலைக் கவிழ்க்க சதி: 3 ஒடிசாவினர் கைது!

ரயிலைக் கவிழ்க்க முயன்றதாக கைது செய்யப்பட்டவர்கள்.
ரயிலைக் கவிழ்க்க முயன்றதாக கைது செய்யப்பட்டவர்கள்.

மைசூரில் தண்டவாளத்தில் மரக்கட்டைகளை வைத்து ரயிலைக் கவிழ்க்க முயற்சி செய்ததாக ஒடிசாவைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தண்டவாளத்தில் கிடந்த கட்டைகள்
தண்டவாளத்தில் கிடந்த கட்டைகள்

கர்நாடகா மாநிலம் சமாராஜநகர் மற்றும் மைசூரு இடையே இயக்கப்படும் ரயில் (எண் 06275) தண்டவாளத்தில் பொருட்கள் கிடைப்பதை லோகோ பைலட் பார்த்துள்ளார்.

இதையடுத்து ரயிலை நிறுத்திப் பார்த்த போது தண்டவாளத்தில் மரக்கடை மற்றும் இரும்பு ஸ்லிப்பரை மர்மநபர்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நஞ்சன்கூடு மற்றும் கடகோலா ரயில் நிலையம் ஓடிக்கொண்டிருந்த ரயிலை கவிழ்க்க இந்த சதி நவ.12-ம் தேதி நடைபெற்றது.

இந்த சம்பவம்தொடர்பாக உதவி பாதுகாப்பு கமாண்டர் எம்.என்.ஏ.கான் மற்றும் ஆர்பிஎஃப் மைசூரு போஸ்ட் கமாண்டர் கே.வி.வெங்கடேஷா ஆகியோர் தங்கள் குழு மற்றும் நாய்படையுடன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில். ரயிலைக் கவிழ்க்க தண்டாவளத்தில் மரக்கட்டை, இரும்பு ஸ்லிப்பரை வைத்ததாக ஒடிசாவைச் சேர்ந்த சோமே மராண்டி(22), பஜானு முர்மு(28), தசாமத் மராண்டி(32) ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டனர். குடிபோதையில் ரயிலைக் கவிழ்க்க அவர்கள் தண்டவாளத்தில் மரக்கட்டை மற்றும் இரும்பு ஸ்லிப்பரை வைத்தது விசாரணையில் தெரிய வந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in