நிரஞ்சனா, அனில்குமார், கெளதம்
நிரஞ்சனா, அனில்குமார், கெளதம்

சோகம்... பம்பா நதியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் பம்பா ஆற்றில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பம்பா நதியில் நடைபெற்ற மீட்பு பணி.
பம்பா நதியில் நடைபெற்ற மீட்பு பணி.

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், ரன்னியில் வசித்த அனில் குமார் (54), அவரது மகள் நிரஞ்சனா (17), அனில் குமாரின் சகோதரி ஆஷா, இவரது மகன் கௌதம் (15) ஆகியோர் நேற்று மாலை பம்பா ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது அவர்கள் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினர்.

இவர்களில் ஆஷா உள்ளூர் மக்களால் மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த உள்ளூர் மக்கள் கூறுகையில், "ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது முதலில் சிறுவன் கௌதம் நீரில் மூழ்கினார். அவரைக் காப்பாற்ற முயன்ற குமார், நிரஞ்சனா ஆகியோர் அடுத்தடுத்து நீரில் மூழ்கினர்.

நீரில் மூழ்கியோரை தேடும் பணி
நீரில் மூழ்கியோரை தேடும் பணி

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, இங்கிருந்தவர்கள் விரைந்து சென்று அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால், ஆஷாவை மட்டுமே காப்பாற்ற முடிந்தது" என்றனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள், உள்ளூர் போலீஸார் அங்கு விரைந்து சென்று நீரில் மூழ்கி இறந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பம்பா நதியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in