ஷாக்.. மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த பால் வாகனம்: 3 பேர் பலி, 20 பேர் படுகாயம்!

சிக்கிமில் ஏற்பட்ட விபத்து
சிக்கிமில் ஏற்பட்ட விபத்து

சிக்கிமில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து கார்கள் மீது மோதிய பால் வாகனத்தால் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

பால் வாகனம் மோதி சேதமான கார்கள்
பால் வாகனம் மோதி சேதமான கார்கள்

சிக்கிம் மாநிலம், ராணிபூல் நகரில் நேற்று மாலை தாம்போலா விளையாட்டு கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்து. இதற்காக ஊரில் உள்ள பொதுமக்கள் பலரும் வாகனங்களிலும், நடந்தும் வந்து சேர்ந்தனர். திருவிழாவில் பல இடங்களில் கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

இதனால் அப்பகுதி மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது பால் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல கார்கள் மீது பயங்கரமாக மோதியது. இதனால் கார்கள் மக்கள் கூட்டத்தில் மோதியது. இதனால் கார்களுக்கு மத்தியில் பலர் சிக்கிக் கொண்டனர்.

இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த மீட்புப்படையினர் விரைந்து காயமடைந்தவர்களை மீட்டு சென்ட்ரல் ரெஃபரல் மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சிக்கிம் அரசு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அத்துடன் காயமடைந்தவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்படும் என்றும் கூறியுள்ளது. அத்துடன் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பால் வாகனத்தின் பிரேக் பழுதடைந்ததால் இந்த விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in