
தெலங்கானா மாநிலத்தில், விவசாயிகள் சென்ற டிராக்டர் கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில், 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் தற்போது உழவு பணிகளை விவசாயிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால் அதற்கு முன்னதாக பணிகளை துவக்கி விவசாய பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதற்காக டிராக்டர் ஒன்றில் விவசாயிகள் சிலர் சென்று கொண்டிருந்தனர். சதாசிவ்பேட்டை அருகே சென்ற போது, ட்ராக்டர் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.
இதையடுத்து அருகில் இருந்த கால்வாய்க்குள் டிராக்டர் பாய்ந்து விபத்திற்கு உள்ளானதில், டிராக்டரில் இருந்த 3 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகள் மூவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.