சுங்கச்சாவடியில் வாகனங்கள் மீது மோதிய கார்… 3 பேர் உயிரிழப்பு!

சுங்கச்சாவடியில் வாகனங்கள் மீது மோதிய கார்… 3 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

வொர்லி நகரில் இருந்து பாந்த்ரா நோக்கி நேற்று இரவு 10 மணிக்கு கார் என்று சொன்று கொண்டிருந்தது. சி லிங்க் சாலையில் உள்ள சுங்கச்சாவடி பகுதியில் சென்று கொண்டிருந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியில் வரிசையாக நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியது.

விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இன்னோவா கார், பென்ஸ் காரின் மீது முதலில் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து மற்ற கார்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் தப்பிச் செல்ல முயன்றதாக உதவி காவல் ஆணையர் கிருஷ்ணகாந்த் உபாதியாய் தெரிவித்துள்ளார்.

விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in