3 நாள் போலீஸ் விசாரணை முடிந்தது... ரவுடி கருக்கா வினோத் சிறையில் அடைப்பு!

3 நாள் போலீஸ் விசாரணை முடிந்தது... ரவுடி கருக்கா வினோத் சிறையில் அடைப்பு!

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி கருக்கா வினோத்துக்கு 15ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீசிய வழக்கில் தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத்தை கிண்டி போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து ரவுடி கருக்கா வினோத்தை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கிண்டி போலீஸார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு செய்தனர். கடந்த 30ம் தேதி ரவுடி கருக்கா வினோத்தை பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டை 9வது அமர்வு பொறுப்பு நீதிபதி சந்தோஷ் முன்னிலையில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

பின்னர் நீதிபதி, ரவுடி வினோத்தை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இன்றுடன் மூன்று நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து கிண்டி போலீஸார் இன்று மாலை ரவுடி கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, ரவுடி வினோத்தை வரும் 15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டார். இதையடுத்து, காவல்துறையினர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in