ஊராட்சி மன்ற செயலாளரை கொன்றது ஏன்?- கைதான 3 பேர் அதிர்ச்சி வாக்குமூலம்!

கைதான மூன்று பேர்
கைதான மூன்று பேர்

மதுரையில் ஊராட்சி மன்ற செயலாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரை கருப்பாயூரணி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம், இடையபட்டி ஊராட்சியின் செயலாளரான வரிச்சியூர் பகுதியைச் சேர்ந்த லஷ்மணனை கடந்த கடந்த 26-ம் தேதி காலை இருசக்கர வாகனத்தில் கோயில் பூஜைக்காக தச்சனேந்தல் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த சில மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் லஷ்மணனை கடுமையாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில், ரத்த வெள்ளத்தில் கிடந்த லஷ்மணனை சாலையில் சென்றவர்கள் தூக்கி ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து, கருப்பாயூரணி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது லட்சுமணன் மனைவி வள்ளி அளித்த தகவலின் பேரில், கணேசனின் மகன்கள் சரத்குமார், சிங்கராஜ் மற்றும் மணிகண்டன் ஆகிய மூவரையும் கருப்பாயூரணி காவல் துறையினர் தேடி வந்தனர். அந்த 3 பேரும் கருப்பாயூரணி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

பின்னர் கைதான 3 பேரும் அளித்த வாக்குமூலத்தில், இடையப்பட்டி ஊராட்சி செயலாளராக இருந்த லட்சுமணன், கருப்புக்கால் காளியம்மன் கோயிலில் பூசாரியாகவும் இருந்து வந்தார். எனவே அவருக்கு கோவிலில் பாரம்பரிய வழக்கப்படி முதல் மரியாதை தரப்பட்டு வந்தது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்.

இதையடுத்து, ஊர் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, லட்சுமணன் இருக்கும் வரை, அவருக்குத்தான் கோயிலில் முதல் மரியாதை என்று ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர். எனவே, நாங்கள் அவரை கொலை செய்ய முடிவு செய்தோம். அவர், தினமும் காலை நேரத்தில் கருப்புக்கால் கோயிலுக்கு செல்வது வழக்கம். எனவே, நாங்கள் தச்சனேந்தல் ரோட்டில் ஆயுதங்களுடன் தயாராக இருந்தோம். அப்போது, லட்சுமணன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டோம். அப்போது, அவர் எங்களை அடிக்கப் பாய்ந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றோம்" என்றனர்.

தொடர்ந்து, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in