திருப்பூர் அருகே 30 அடி ஆழ கிணற்றில் இளம் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அவிநாசிபாளையம் அருகில் உள்ள கோவில்பாளையம் லட்சுமி நகரில் ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான கிணறு உள்ளது.
சுமார் 30 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றில் தற்போது மழை பெய்து வருவதால் நீர்மட்டம் சற்று உயர்ந்து 8 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இந்நிலையில் இந்த கிணற்றில் இளம் பெண் ஒருவர் சடலமாக மிதப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவிநாசிபாளையம் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், காங்கேயம் தீயணைப்பு துறையினர் உதவியுடன் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கிணற்றில் சடலமாக கிடந்தவர், திருப்பூர் சாலையில் வசித்து வரும் சக்திவேல் மனைவி கௌசல்யா (25) என்பது தெரியவந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த பெண் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா, அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா என்ற கோணங்களில் அவிநாசிபாளையம் போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கோடிக்கணக்கில் பணம், தங்கம், வைரம் பறிமுதல்... தெறிக்கவிட்ட தேர்தல் பறக்கும் படை!
அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் +2 மாணவன் உயிரிழப்பு... மருத்துவர் கைது!
80 வயது முதியவரை 26 வயது இளைஞனாக்கலாம்… விஞ்ஞானிகள் சாதனை!
தேனியில் பரபரப்பு.. கவுன்சிலர்களின் பிச்சை எடுத்து போராட்டம்!
பிக் பாஸ் நிக்சனின் சில்மிஷ வீடியோ... போட்டியாளர்கள் அதிர்ச்சி!