அதிர்ச்சி... கல்லூரி பேருந்து மோதியதில் நொறுங்கிய மினி லாரி; 25 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்

அதிர்ச்சி... கல்லூரி பேருந்து மோதியதில் நொறுங்கிய மினி லாரி; 25 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்

சிவகங்கை அருகே கல்லூரி பேருந்தும், மினி லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் மாணவர்கள் உட்பட 25 பேர் காயம் அடைந்தனர்.

தனியார் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து தினமும்  திருக்கோஷ்டியூர் பகுதியில் இருந்து மாணவ, மாணவிகளை அழைத்து வருவது வழக்கம். அந்த வகையில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் கல்லூரி நோக்கி இன்று பேருந்து சென்று கொண்டிருந்தது.

பேருந்து கரும்பாவூர் விலக்கு அருகே வந்தபோது, எதிரே வந்த மினி லாரி மீது மோதியது. இதில், கல்லூரி பேருந்தும், மினி லாரியும் சேதம் அடைந்தன. திடீரென அந்த மினி லாரி கட்டுப்பாட்டை இழந்தன. மேலும், கல்லூரி மாணவிகள் உள்பட 25-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சிவகங்கை தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in