50 ரூபாய்க்காக சண்டையிட்டுக்கொண்ட நண்பர்கள்...ஆத்திரத்தில் நடந்த கொலை

50 ரூபாய்க்காக சண்டையிட்டுக்கொண்ட நண்பர்கள்...ஆத்திரத்தில் நடந்த கொலை
கொலை

பெங்களூருவில் நேற்று இரவு 50 ரூபாய் பணத்துக்காக இரண்டு நண்பர்களிடையே ஏற்பட்ட சண்டையில், 24 வயது இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு ஜெய் மாருதி நகரைச் சேர்ந்த சாந்தகுமாரின் சட்டைப்பையில் இருந்து 50 ரூபாயை லாகரே பகுதியை சேர்ந்த சிவமது எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சாந்தகுமார் சிவமதுவிடம் சண்டையிட்டார். இந்த சண்டை முற்றிய நிலையில் ஆத்திரத்தில் சிவமதுவை மார்பில் இரண்டு முறை கத்தியால் குத்தி விட்டு சாந்தகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் சிவமதுவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குருபரஹள்ளி வட்டம் அருகே நேற்று இரவு 7.15 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கொலைவழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய குற்றவாளியை தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in