பயங்கர வெடி விபத்து; உடல் கருகி 2 பேர் பலியான சோகம்!

வெடி விபத்தில் இரு வாலிபர்கள் பலி
வெடி விபத்தில் இரு வாலிபர்கள் பலி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தோட்டத்தில் நாட்டு வெடி தயாரித்துக் கொண்டு இருந்த போது நேர்ந்த விபத்தில் இரு வாலிபர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மங்கம்மாள் சாலை பகுதியை சேர்ந்த ராசு மகன் ராஜா (25). அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் கருப்பையா (32). இவர்கள் அரவங்குறிச்சி பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் திருவிழா மற்றும் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்காக பட்டாசு தயாரித்து அதனை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இன்று பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வைத்திருந்த இடத்தில் தீ பிடித்தது. இதில் ராஜா மற்றும் கருப்பையா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். தீ விபத்து ஏற்பட்டவுடன் அங்கிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான 2 பேர் உடல்களையும் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த வெடிமருந்து ஆலை அனுமதி பெறாமல் நடந்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஆலையை நடத்தி வந்த நபரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in