ஆற்றுக்குள் கிடந்த டூவீலர்... இண்டிகேட்டர் வெளிச்சத்தால் மீட்கப்பட்ட 2 வாலிபர்களின் உடல்கள்!

கேரளாவில் ஆற்றில் தெரிந்த திடீர் வெளிச்சம்
கேரளாவில் ஆற்றில் தெரிந்த திடீர் வெளிச்சம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே, ஆற்றில் இருசக்கர வாகனம் விழுந்த விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள எர்ணாகுளம் நகரில் மஞ்சுவேல் பகுதியில் ஆறு உள்ளது. நேற்று இரவு அப்பகுதியில் பொதுமக்கள் சென்று கொண்டிருந்தபோது, ஆற்றுக்குள் இருந்து திடீரென விட்டு விட்டு வெளிச்சம் தெரிந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு வந்து பார்த்தபோது, ஆற்றுக்குள் இருசக்கர வாகனம் ஒன்று விழுந்திருப்பதும், அதன் இண்டிகேட்டர் எரிந்து கொண்டிருப்பதும் தெரியவந்தது.

ஆற்றில் கவிழ்ந்த டூவீலர்
ஆற்றில் கவிழ்ந்த டூவீலர்

உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆற்றில் இருந்து இருசக்கர வாகனம் மீட்கப்பட்டது. பின்னர் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் யார் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2 இளைஞர்களின் உடல்கள் ஆற்றில் மிதந்தது தெரிய வந்து மீட்கப்பட்டது.

நீரில் மூழ்கி  உயிரிழப்பு
நீரில் மூழ்கி உயிரிழப்பு

விசாரணையில் உயிரிழந்தவர்கள் கெவின் ஆண்டனி மற்றும் ஆசாத் என்பது தெரியவந்தது. ஆற்றங்கரையோரம் வாகனத்தில் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் இருசக்கர வாகனம் விழுந்து விபத்திற்குள்ளாகி இருக்கலாம் என போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

அதிர்ச்சி... காரில் கட்டுக்கட்டாக லஞ்சப் பணம்; சோதனையில் சிக்கிய பெண் மோட்டார் வாகன ஆய்வாளர்

10 லட்ச ரூபாய் செலவில் தன்னை தானே திருமணம் செய்து கொண்ட பெண்!

ரசிகர்களுக்கு விருந்து... உலகக்கோப்பை போட்டியில் இன்று பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா பலப்பரீட்சை!

அதிர்ச்சி... கணவருடன் சண்டை... 19 வயது பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in