
திண்டுக்கல் அருகே சுமார் 2 அடி நீள உடும்பு புகுந்ததால் வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். இதையடுத்து தீயணைப்புத்துறையினர் உடும்பை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே உள்ள சௌபாக்யா நகர் பகுதியில், காந்திராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பேக்கரி ஊழியரான இவரது வீட்டிற்குள், வாஷிங் மெஷின் அருகே வால் ஒன்று தெரிந்ததால் அதிர்ச்சி அடைந்தார். அதை பாம்பு என்று நினைத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து சோதனையிட்டபோது, அது பாம்பு அல்ல சுமார் 2 அடி நீள உடும்பு என்பது தெரியவந்தது. இதையடுத்து விலங்குகளைப் பத்திரமாக பிடிக்க பயன்படுத்தப்படும் கருவியை வைத்து உடும்பை லாவகமாக பிடித்தனர்.
இதையடுத்து, உடும்பை வனப்பகுதியில் விடுவிப்பதற்காக, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில், வீட்டிற்குள் உடும்பு புகுந்த சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!
இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படை வீரர் காயம்!
திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!
வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்