வைகையாற்றில் நெரிசலில் சிக்கி பறிபோன உயிர்கள்; 6 பேர் கவலைக்கிடம்

கள்ளழகர் வைபவத்தில் நடந்த சோகம்
வைகையாற்றில் நெரிசலில் சிக்கி பறிபோன உயிர்கள்; 6 பேர் கவலைக்கிடம்

மதுரையில் கள்ளழர் வைகையாற்றில் இறங்கியபோது கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சித்திரை திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான உலகப்புகழ்பெற்ற கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி எழுந்தருளும் நிகழ்வு இன்று நடைபெற்றது. கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி, தங்க குதிரையில் வைகையாற்றில் இறங்கி எழுந்தருளினார். கள்ளழகர் ஆற்றில் இறங்கியதும் பரவசமடைந்த பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆரவாரமடைந்தனர். பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். லட்சக்கணக்கான பக்தர்கள் வையாற்றில் ஒரே நேரத்தில் இறங்கியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

இந்த நெரிசலில் சிக்கி பக்தர்கள் 2 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இறந்தவர்களின் உடல்களை மீட்டு காவல் துறையினர், மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காயமடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 40 வயது பெண் ஒருவரும், 45 வயது ஆண் ஒருவரும் இறந்துள்ளனர். இவர்களை அடையாளம் காணும் பணியில் காவல் துறை ஈடுபட்டுள்ளனது.

இதனிடையே, 9498042434 என்ற உதவி எண்ணை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், நெரிசலில் சிக்கி ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் மூர்த்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

வைகையாற்றில் பக்தர்கள் இறங்க வேண்டாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்திய நிலையில், இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in