உள்விளையாட்டு அரங்கம் கட்டும் போது பயங்கரம்: புலம் பெயர் தொழிலாளர்கள் இருவர் பலி!

மொயினாபாத்தில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
மொயினாபாத்தில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

தெலங்கானா மாநிலத்தில் உள்விளையாட்டு அரங்க கட்டுமானப் பணியின் போது, மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மொயினாபாத் அருகே தனியார் நிறுவனம் சார்பில் டேபிள் டென்னிஸ் அகாடமி தொடங்குவதற்காக புதிய உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த பணியில் இன்று 14 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஈடுபாடுகளுக்குள் சிக்கி அலறினர்.

மேற்கூரை இடிந்து விபத்து
மேற்கூரை இடிந்து விபத்து

அங்கே அருகில் இருந்தவர்கள், தீயணைப்புத் துறையினர், போலீஸார் ஆகியோருக்கு தகவல் அளித்துவிட்டு, உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விரைந்து வந்த மீட்புப்படையினர், ஈடுபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் பீகாரைச் சேர்ந்த பப்லு, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுனில் ஆகிய இருவரும் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.

மீட்புப்பணிகள் தீவிரம்
மீட்புப்பணிகள் தீவிரம்

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், கட்டுமானப் பணிகளுக்கு தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர். சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

விபத்தில் சிக்கிய பெரும்பாலானவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆவர். சிலர் குடும்பத்தினருடன் மொயினாபாத் பகுதியில் தங்கியிருந்து பணி செய்து வந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்ததும், அவர்களது குடும்பத்தினர் அங்கு திரண்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in