கோவையில் பரபரப்பு... புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையின் சடலம்!

 புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு
புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு

கோவை அடுத்த கோவில்பாளையம் அருகே பிறந்து இரண்டு நாட்களே ஆன ஆண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கோவில்பாளையத்திலிருந்து கருவலூர் செல்லும் சாலையில் கௌசிகா நதி உள்ளது. இன்று காலை அந்தப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் கௌசிகா நதியினருகே பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு
புதரில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோவில்பாளையம் போலீசார் தவறான உறவால் பிறந்த குழந்தையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? எனவும், அருகில் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருவதால் நிறுவனத்தில் தங்கியுள்ள எவராவது கொண்டு வந்து வீசி உள்ளனரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in