ஷாக்... 3 வயது குழந்தை பலாத்காரம்... 2 புலம் பெயர் தொழிலாளர்கள் கைது!

சிறுமி
சிறுமி

கொச்சியில் புலம் பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த 3 வயது குழந்தையைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போக்சோ
போக்சோ

கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள ஆலுவாவில் பிளைவுட் நிறுவனம் உள்ளது. அங்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் பணியாற்றுகின்றனர். இங்கு பணியாற்றும் தொழிலாளியின் 3 வயது குழந்தையை இரண்டு பேர் நேற்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தனர்.

இதனால் உடல்நிலை பாதிக்கப்ப்டட அந்த குழந்தை கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அந்த குழந்தையின் தந்தை , காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

கைது
கைது

இதையடுத்து நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த மூன்று மாதங்களாக கேரளாவில் எர்ணாகுளத்திற்குட்பட்ட கிராமங்களில் நான்கு குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளதானதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜூலை மாதம் பீகாரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கேரளாவில் இப்பிரச்சினை பூதாகரமாக மாறியது. கொலைக்கு முன் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த நிலையில் கொச்சியில் 3வயது குழந்தை நேற்று பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in