
டெல்லியில் சிட்லி கபார் பகுதியை சேர்ந்தவர் முகமது அரீப். இவர் தனது நண்பர்களுடன் இணைந்து மஹால் செளக் பகுதியில் சுற்றியுள்ளார். அப்போது, அரீப் மற்றும் நண்பர்களுக்கு எதிரான கும்பலை சேர்ந்த ஷேஷான், முகமது அர்ஹாம், அட்னன் அஹமத், முகமது கைப் ஆகியோர் அங்கு வந்துள்ளனர். இருதரப்புக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வந்த நிலையில், நேற்று மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது. அப்போது, ஷேஷான் மற்றும் அவரது நண்பர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அரீப்பை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவருடன் இருந்த நண்பர்களும் பயத்தில் ஓடிய நிலையில், அந்த பகுதியில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸுக்கும், போலீஸூக்கும் தகவல் அளித்தனர்.
இதையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற போலீஸார் அரீப்பின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலையாளிகளை வலைவீசி தேடிய நிலையில், அவர்கள் பதுங்கியிருக்கும் இடம் அறிந்து சென்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஏரியா தகராறில் 18 வயது வாலிபர் கொல்லப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...