
பயணிகளுடன் சென்ற தனியார் ஆம்னிப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 18 பயணிகள் காயமடைந்தனர்.
கோவையில் இருந்து நேற்று நள்ளிரவு 58 பயணிகளுடன் பெங்களூருவை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. தருமபுரி சோகத்தூர் அருகே சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், லாரி பார்க்கிங் பகுதியில் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் சென்றபோது சாலையின் குறுக்காக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டை ஓட்டுநர் கவனிக்காததால் அதன் மீது பேருந்து வேகமாக மோதியுள்ளது.
இதில் நிலைகுலைந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களும், விரைந்து வந்த போலீஸாரும், விபத்துக்குள்ளான பேருந்துக்குக் சிக்கியிருந்த பயணிகளை ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் 18 பயணிகள் காயம் அடைந்தனர். இதில் இருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தருமபுரி நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நல்வாய்ப்பாக உயிர்ச்சேதமோ, பெரிய அளவிலான பாதிப்புகளோ விபத்தில் ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிக்க கூடியது.
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!
அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!
110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!
1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!
படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி!