16 வயதில் சிறுமி கர்ப்பம்: 13 ஆண்டுகளுக்குப் பின் முதியவருக்கு 50 ஆண்டு சிறைத்தண்டனை!

16 வயதில் சிறுமி கர்ப்பம்: 13 ஆண்டுகளுக்குப் பின் முதியவருக்கு  50 ஆண்டு சிறைத்தண்டனை!

கேரளாவில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு 50 ஆண்டு சிறைத் தண்டனை போக்சோ நீதிமன்றம் வழங்கியுள்ளது.

கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஷிஜு (43). இவர் 2009-ம் ஆண்டு பட்டாம்பி பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி விட்டு தலைமறைவாகி விட்டார்.

இதனால் அச்சிறுமியின் பெற்றோர், பட்டாம்பி போலீஸாரிடம் புகார் அளித்தனர். இதன் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஷிஜுவை கைது செய்தனர்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை பட்டாம்பி விரைவு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி சதீஷ்குமார் நேற்று தீர்ப்பளித்தார். அதில், சிறுமியை கர்ப்பமாக்கிய ஷிஜுவிற்கு 50 ஆண்டு சிறைத் தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து பட்டாம்பி சிறைச்சாலையில் ஷிஜு அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் திருச்சூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.