அதிர்ச்சி... பயணிகளுடன் வயலுக்குள் பாய்ந்த மினிபேருந்து- அலறிய மாணவிகள்

வயலில் கவிழ்ந்து மினிபேருந்து விபத்து
வயலில் கவிழ்ந்து மினிபேருந்து விபத்துBG
Updated on
1 min read

நாமக்கல் அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்தில் மாணவிகள் உட்பட 16 பேர் காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, நாமக்கல் ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே பொன்மலர்பாளையத்திலிருந்து மினி பேருந்து ஒன்று பரமத்தி வேலூருக்கு புறப்பட்டது. இந்த பேருந்தில் பள்ளி மாணவிகள் உட்பட 20-கும் மேற்பட்டோர் பயணித்ததாக கூறப்படுகிறது. பேருந்தை, சந்தோஷ் (26) என்பவர் ஓட்டி வந்தார். மினி பேருந்து கருக்கம்பாளையம் பகுதியில் வந்த போது, எதிரே சைக்கிளில் வந்தவர் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் இடது புறமாக பேருந்தை திருப்பியதாக கூறப்படுகிறது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, அருகில் இருந்த வயலுக்குள் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த மாணவிகள், பயணிகள் காயமடைந்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து 16 பேரை மீட்டு, ஆம்புலன்ஸ்கள் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மாணவிகள் பரமத்தி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பார்மசி பயின்று வருகின்றனர். விபத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் உமா, சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் விபத்து ஏற்பட்டுள்ள இடத்தில் விழிப்புணர்வு பதாகைகள் அமைக்க வேண்டுமென வட்டார போக்குவரத்து அலுவலர், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in