'எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருகிறேன்' - நம்பிக் கொடுத்தவரிடம் ரூ.1.5 கோடி சுருட்டிய திமுக பிரமுகர்!

'எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருகிறேன்' -  நம்பிக் கொடுத்தவரிடம் ரூ.1.5 கோடி சுருட்டிய திமுக பிரமுகர்!

மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித்தருவதாக ரூ.1.5கோடி மோசடி செய்த திமுக பிரமுகர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் வி.சி.ஆர்.குமரன். இவர் வேலூர் மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சேர்ந்த நவநீதிகிருஷ்ணன் மகள் அபிதாவிற்கு மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக ரூ.1.5 கோடி வாங்கியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கித்தராமல், கொடுத்த பணத்தையும் தராமல் வி.சி.ஆர். குமரன் ஏமாற்றி விட்டார் என்று ஆன்லைன் மூலம் நவநீதகிருஷ்ணன் புகார் செய்துள்ளார். இதன் அடிப்படையில் வி.சி.ஆர்.குமரன் மீது திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.