சோகம்... பள்ளிக்கு புறப்பட்ட மாணவன்; வீட்டில் மின்கம்பி அறுந்து விழுந்து பலி

மின்சாரம்
மின்சாரம்

புதுக்கோட்டையில் வீட்டின் மேலே சென்ற மின் கம்பி திடீரென அருந்து விழுந்ததில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் கோமாபுரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்- இந்திரா காந்தி தம்பதியின் மகன் ராம்குமார் (15). இவர் தஞ்சை மாவட்டம் முத்தாண்டிப்பட்டி அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை பள்ளிக்கு கிளம்பி கொண்டிருந்த ராம்குமார், வீட்டின் பின்புறம் சென்றபோது மேலே சென்ற மின்சார கம்பி எதிர்பாராத விதமாக ராம்குமார் மேல் அறுந்து விழுந்தது.

உயிரிழந்த சிறுவன் ராம்குமார் (15)
உயிரிழந்த சிறுவன் ராம்குமார் (15)

இதில் அலறி துடித்து கீழே விழுந்த ராம்குமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மின்விபத்து
மின்விபத்து

தகவல் அறிந்த போலீஸார், ராம்குமாரின் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்த சிறுவன், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அடுத்த அதிர்ச்சி... நீட் தேர்வால் மாணவி தற்கொலை!

அதிர்ச்சி... ‘பிரேமம்’ இயக்குநருக்கு ஆட்டிஸம் பாதிப்பு!

110 நாட்கள் உண்ணாவிரதம்... 16 வயது சிறுமியின் ஆச்சரிய சாதனை!

1000 ரூபாயில் செயற்கைக்கோள்... பிளஸ் 2 மாணவரின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!

படப்பிடிப்பில் பிரபல நடிகர் படுகாயம்... மருத்துவமனையில் அனுமதி! 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in