அதிகாலையில் கோர விபத்து; தறிகெட்டு ஓடிய அரசு பேருந்து... 15க்கும் மேற்பட்டவர்கள் காயம்!

அதிகாலையில் கோர விபத்து; தறிகெட்டு ஓடிய அரசு பேருந்து...  15க்கும் மேற்பட்டவர்கள் காயம்!

புதுச்சேரி அருகே அரசு பேருந்து ஒன்று தறிகெட்டு ஓடிய நிலையில் சாலை நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். 

நேற்று நள்ளிரவு சென்னையில் இருந்து கும்பகோணத்துக்கு புறப்பட்ட அரசு விரைவுப் பேருந்து ஒன்று, இன்று அதிகாலையில் விபத்துக்குள்ளானது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த போது புதுச்சேரிக்கு அருகே கோட்டகுப்பம் பகுதியில் திடீரென பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவில் உள்ள  தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 15க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் மூலம் பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கோட்டகுப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in