பாலக்காட்டில் 144 தடை உத்தரவு அமல்: பதற்றத்தைக் குறைக்க நடவடிக்கை!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி சுபைர்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி சுபைர்

அடுத்தடுத்து நடக்கும் அரசியல் படுகொலைகளால் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தணித்து அமைதியை ஏற்படுத்தும் வகையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் வரும் 20-ம் தேதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் எஸ்.டி.பி.ஐ மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இடையே தொடர்ந்து மோதல்கள் நிகழ்ந்துவருகின்றன. கடந்த 6 மாதங்களில் இருதரப்பிலும் 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே இந்தப் பிரச்சினை நிலவி வந்தாலும், நேற்று முன்தினம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி சுபைர் என்பவர் பாலக்காட்டில் வைத்து கொல்லப்பட்டார். இதற்குப் பழிக்குப் பழியாக ஆர்எஸ்எஸ் தொண்டர் ஸ்ரீனிவாசன் என்பவர் நேற்று கொல்லப்பட்டார். பாலக்காட்டில் உள்ள அவரது கடையில் இருந்த ஸ்ரீனிவாசனை மர்மக் கும்பல் கடைக்குள் புகுந்து வெட்டிச் சாய்த்தது.

இருதரப்பிலும் தொடர்ந்து மாறி, மாறி அரசியல் கொலைகள் நடப்பதால் பாலக்காடு பதற்றம் மிகுந்த பகுதியாக உள்ளது. இதனை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் பாலக்காட்டில் வரும் 20-ம் தேதிவரை 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

சமூகவலைதளங்களில் மதப் பிரச்சினையை உருவாக்கும்வகையில் பதிவு போடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in