கர்நாடகாவில் பரபரப்பு... மிலாது நபி ஊர்வலத்தில் கல்வீச்சு - 144 தடை உத்தரவு

ஷிவமோகாவில் 144 தடை உத்தரவு
ஷிவமோகாவில் 144 தடை உத்தரவு

கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் மிலாது நபி ஊர்வலத்தில் நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவம் தொடர்பாக 40 பேரை கைது செய்துள்ள போலீசார் 144 தடை உத்தரவும் பிறப்பித்துள்ளதால் கர்நாடகாவில் பரபரப்பு நிலவி வருகிறது.

கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா மாவட்டத்தில் மிலாது நபி விழாவை ஒட்டி அமைதி ஊர்வலம் நடைபெற்றது. சாந்திநகர் ராகிகுடா பகுதியில் பேரணி வந்து கொண்டிருந்தபோது ஷிவமோகா மகாநகரா பலிக்கா என்ற கட்டிடத்தின் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக 40 பேரை கைது செய்துள்ள போலீசார் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ”இதுபோன்ற வன்முறை சம்பவங்களை அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. தற்போதைக்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஷிவமோகா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மிதுன் குமார், சம்பவம் நடந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வீச்சு சம்பவத்தில் படுகாயம் அடைந்த காவலர்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில வீடுகள் மற்றும் வாகனங்கள் கல்வீச்சில் சேதம் அடைந்துள்ளது. சில போலீஸாரும், கல்வீச்சில் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளோம். அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக ஒரு குழுவினரை கைது செய்துள்ளோம். வீடியோ காட்சிகள் மற்றும் நேரடி சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஷிவமோகா எஸ்.பி மிதுன்குமார் இ.கா.ப
ஷிவமோகா எஸ்.பி மிதுன்குமார் இ.கா.ப

அதிரடிப்படையைச் சேர்ந்த இரண்டு படையணியினர், 20 மாவட்ட ரிசர்வ் போலீஸ் படையினரும், 500 ஹோம் கார்டுகளும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பணியமத்தப்பட்டுள்ளனர். இந்த ஒரு சம்பவத்தை தவிர மாவட்டம் முழுவதும் மிலாது நபி ஊர்வலம் அமைதியாக நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக யாரும் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் இது போன்ற வதந்திகளை நம்ப கூடாது” எனவும் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in