86 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; 14 பாகிஸ்தானியர்கள் கைது
86 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; 14 பாகிஸ்தானியர்கள் கைது

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருள் பறிமுதல்... இந்திய கடலோர காவல் படை நடவடிக்கை

பாகிஸ்தானில் இருந்து குஜராத்துக்கு கடத்திவரப்பட்ட 600 கோடி ரூபாய் மதிப்புள்ள 86 கிலோ போதைப் பொருளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

நாடு முழுவதும் சமீப காலமாக போதைப் பொருள்களின் விற்பனை மற்றும் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள விசாரணை அமைப்புகளுடன் இணைந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று குஜராத் மற்றும் ராஜஸ்தானில் நடத்தப்பட்ட ஆய்வின் போது சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை தயாரித்து விற்பனைக்காக வைத்திருந்த நிறுவனத்தை கண்டறிந்து போலீஸார் பறிமுதல் செய்தனர்.

நடுக்கடலில் இந்திய கடலோரக் காவல்படையினர்
நடுக்கடலில் இந்திய கடலோரக் காவல்படையினர்

இதன் தொடர்ச்சியாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக இந்திய கடலோர காவல் படை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் குஜராத் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு ஆகியவை இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தன. நேற்று இரவு பாகிஸ்தானில் இருந்து குஜராத் மாநிலத்தை நோக்கி வந்து கொண்டிருந்த படகு ஒன்றை நிறுத்தி இந்திய கடலோர காவல் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

கைது
கைது

அப்போது அந்த படகில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்புள்ள 86 கிலோ போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல் படையினர், கப்பலில் இருந்த 14 பாகிஸ்தானியர்களை கைது செய்து போர்பந்தர் போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in