பகீர்! இந்தி புத்தகம் எடுத்துவராத மாணவன் மீது கொடூரத் தாக்குதல்... ஆசிரியர் கைது!

பகீர்! இந்தி புத்தகம் எடுத்துவராத மாணவன் மீது கொடூரத் தாக்குதல்... ஆசிரியர் கைது!

டெல்லியின் துக்மிர்பூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் இந்தி பாடப்புத்தகத்தை கொண்டு வர மறந்த 6-ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் அறைந்துள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

துக்மிர்பூர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவன், இந்தி பாடப்புத்தகத்தை கொண்டு வர மறந்துவிட்டான். இதனால் கோபமடைந்த ஆசிரியர், மாணவனை வெளியே செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி சரமாரியாக அறைந்துள்ளார். மேலும், அச்சிறுவனின் கழுத்தையும் அழுத்தியுள்ளார். இந்த சம்பவத்திற்குப் பிறகு சிறுவனின் உடல்நிலை மோசமடைந்ததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 7 அன்று 12 வயது சிறுவன் பள்ளி ஆசிரியரால் தாக்கப்பட்டதால் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனையிலிருந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 வழக்கு
வழக்கு

சிறுவனின் தந்தையின் புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் சாதுல் ஹசன் மீது தயாள்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in