வழிகேட்பது போல நடித்து பள்ளி மாணவி கடத்தல்...12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

வழிகேட்பது போல நடித்து பள்ளி மாணவி கடத்தல்...12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்கா மாவட்டத்தை சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை வழிகேட்பது போல நடித்து கடத்திய இருவர், அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தூக்கி வீசிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோபிகாந்தர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புதன்கிழமையன்று 6-ம் வகுப்பு படிக்கும் சிறுமி பள்ளிக்கு சென்றுவிட்டு தனது புத்தகங்களை மறந்துவிட்டதால் அதனை எடுக்க வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார். அப்போது காரில் வந்த இருவர் அச்சிறுமியிடம் வழி கேட்பது போல நடித்து கடத்தி சென்றுள்ளனர். அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அவர்கள் பக்கத்து மாவட்டமான கோடாவில் தூக்கி வீசிவிட்டு சென்றனர்.

சாந்த்னி சௌக் பகுதியில் காயமடைந்த நிலையில் கிடந்த அச்சிறுமியை உள்ளூர் மக்கள் மீட்டு பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின்னர் சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் வியாழக்கிழமையன்று போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக பேசிய தும்கா துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி (SDPO) நூர் முஸ்தபா அன்சாரி, “தற்போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தும்காவில் உள்ள புலோ ஜானோ முர்மு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளோம்.பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலமும் பெற்றுள்ளோம்” என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in