டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்த பள்ளி பேருந்து... அலறித் துடித்த மாணவர்கள்!

வீட்டிற்குள் புகுந்து விபத்திற்குள்ளான தனியார் பள்ளி பேருந்து
வீட்டிற்குள் புகுந்து விபத்திற்குள்ளான தனியார் பள்ளி பேருந்து

மேட்டுப்பாளையம் அருகே தனியார் பள்ளி பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீட்டிற்குள் புகுந்து விபத்திற்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், காரமடையில் எஸ்.வி.ஜீ.வி என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், மாணவர்களை அழைத்து செல்ல பள்ளி சார்பில் பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பள்ளி முடிந்தவுடன் மாணவர்களை அவர்களது வீட்டில் கொண்டு விடுவதற்காக 20-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றி கொண்டு பள்ளி பேருந்து புறப்பட்டது.

விபத்தில் சிக்கிய பேருந்து
விபத்தில் சிக்கிய பேருந்து

பேருந்தை காரமடை பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். பேருந்து காரமடை ஆசிரியர் காலனி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஒரமாக இருந்த வீட்டிற்குள் புகுந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 மாணவ, மாணவிகள் மற்றும் பேருந்தின் ஒட்டுநர் மற்றும் பெண் ஒருவர் என 12 பேர் காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கிய பேருந்து
விபத்தில் சிக்கிய பேருந்து

இந்த விபத்தில் வீட்டின் சுற்றுச்சுவர், இரும்பு கதவு, வாசல் ஆகியவை சேதமடைந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து வந்த காரமடை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!

அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?

என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in