கோர விபத்து… கார்- வேன் நேருக்கு நேர் மோதல்; 12 பேர் உயிரிழந்த சோக‌ம்

கோர விபத்து… கார்- வேன் நேருக்கு நேர் மோதல்; 12 பேர் உயிரிழந்த சோக‌ம்

பாகிஸ்தானில் கார் – வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிந்து மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள கைர்பூர் மாவட்டத்தில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. சுக்கூர் நகரில் இருந்து கைர்பூர் நோக்கி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

பாபர்லோய் என்ற பகுதியில் சென்று கொண்டு இருந்த போது கட்டுப்பாட்டை இழந்த வேன், நிலைதடுமாறி எதிரே வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்த 16 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்த, 11 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த கோர விபத்து அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in