அதிர்ச்சி... ரூ.116 கோடி போதைப்பொருள் பறிமுதல்... ஆலை கண்டுபிடிப்பு!

கைது செய்யப்பட்ட இருவர்
கைது செய்யப்பட்ட இருவர்

சோலாப்பூரில் ரூ.116 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை மும்பை குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் ஆலை
போதைப்பொருள் ஆலை

மகாராஷ்டிரா மாநிலம், சோலாப்பூர் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் இருப்பதாக மும்பை குற்றப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு அவர்கள் விரைந்து சென்ற போது போதைப்பொருள் தயாரிப்பு ஆலை இயங்கியது தெரிய வந்தது.

அங்கிருந்த அண்ணன், தம்பி இருவரையும் கைது செய்துள்ளனர். உயர்நிலைப் பள்ளி படிப்பை தாண்டாத அவர்கள் இருவரும், சோலாப்பூரில் ஒரு கெமிக்கல் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர். இதன் பின் சொந்தமாக போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சோலாப்பூரில் உள்ள மோஹேல் தாலுகாவில் சிஞ்சோலி எம்ஐடியுசியில் உள்ள ஒரு ஆலையைத் தொடக்கியுள்ளனர்.

அங்கிருந்து ரூ.16 கோடி மதிப்பிலான சுமார் 8 கிலோ எம்.டி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 100 கோடி மதிப்பிலான 60 கிலோ வரையிலான போதைப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ116 கோடியாகும்.

இந்த ஆலையை சீல் வைத்த போலீஸார், இவர் மீதும் போதை மருந்துகள் மற்றும மனநோய் பொருடகள்(என்டிபிஎஸ்) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அவர்களை அக்.19-ம் தேதி காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நெட்வொர்க்கில் தொடர்புடையவர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in