இறந்த மாணவன் தீபக்
இறந்த மாணவன் தீபக்

ராமநாதபுரத்தில் அதிர்ச்சி! வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

10ம் வகுப்பு மாணவன் வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள புனவாசல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் தீபக் வயது 15. இவர் கடலாடியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை பள்ளி வகுப்பறையில் தூக்கிட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த சக மாணவர்கள் உடனடியாக ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். பதறியடித்து ஓடி வந்த அவர்கள், மாணவனின் உடலை கண்டு அதிர்ந்து போயினர். உடனடியாக இதுகுறித்து கடலாடி போலீஸாருக்கு தகவல் அளித்தவர். பள்ளிக்கு விரைந்து வந்த போலீஸார் மாணவனின் சடலத்தை மீட்டு கடலாடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சக மாணவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். அதில் தீபக் இன்று காலை 8 மணிக்கு பள்ளிக்கு வந்ததாகவும், சோர்வுடன் காணப்பட்ட அவர் திடீரென இப்படி தூக்கிட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், மாணவன் தீபக்கிற்கும், அவரது பெற்றோருக்குமிடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன் அவர் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவரை தேடி கண்டுபிடித்து பெற்றோர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மாணவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், பள்ளியில் வேறு ஏதேனும் பிரச்சினை இருந்ததா என்பது குறித்து ஆசிரியர்களிடம் விசாரிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in