அதிர்ச்சி… படிக்காததால் திட்டிய தந்தை; 10-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்துத் தற்கொலை!

அதிர்ச்சி… படிக்காததால் திட்டிய தந்தை; 10-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்துத் தற்கொலை!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே 10-ம் வகுப்பு மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெருந்துறை அருகே திங்களூர் அடுத்த நிச்சாம்பாளையத்தை சேர்ந்த விவசாயி ரமேஷ் என்பவரின் மகன் நகுல் (14). வெள்ளாங்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவன் நகுல் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்ததாக தெரிகிறது.

எனவே நகுலை அழைத்து அவரது தந்தை ரமேஷ் நன்றாக படிக்க வேண்டும் என்று கூறி கண்டித்துள்ளார். இதனால் சிறுவன் கவலை அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நகுல் திடீரென வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டார்.

மயங்கிக் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நகுல் உயிரிழந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in