பரபரப்பான தெருவில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன், ரூ.13 லட்சம் கொள்ளை... போலீஸ் அதிர்ச்சி

கொள்ளை நடந்த வீடு
கொள்ளை நடந்த வீடு

சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை, 13 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடைக்கப்பட்ட பீரோ
உடைக்கப்பட்ட பீரோ

சென்னை பெரம்பூர் ஜமாலியா பகுதியைச் சேர்ந்தவர் ரபீஹீதின் அகமது(68). ஓட்டேரி தாசமகான் பகுதியில் இவருக்குச் சொந்தமாக மேலும் ஓரு வீடு உள்ளது. முகமதுவுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள், ஓரு மகளும் உள்ளனர். இதில் மகன்கள் இருவரும் ஜெர்மனியில் வசித்து வருகின்றனர். மகளுக்கு திருமணமாகி தனது கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக முகமதுவின் மனைவி தனது மகள் வீட்டில் வசித்து வரும் நிலையில் இவர் மட்டும் இங்கு தனியாக உள்ளார். நேற்று இரவு முகமது ஓட்டேரி தாசமகானில் உள்ள வீட்டிற்குச் சென்று தங்கி விட்டு இன்று காலை ஜமாலியா வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 100 சவரன் நகை, மற்றும் 13 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதனையடுத்து ஓட்டேரி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவம் இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர் ‌. சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜமாலியா பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை, 13 லட்சம் பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!

பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை

க்ளாமர் லுக்கில் கெத்து காட்டும் நயன்தாரா!

இடது பக்கம் அண்ணாமலை... நடுவில் முதல்வர் விஜய்யாம்... வலது பக்கம் டிடிவி; ரசிகர்களின் அட்ராசிட்டி போஸ்டர்

மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in