நீச்சல் பழக கிணற்றில் இறங்கிய சிறுவன்... பிளாஸ்டிக் கேன் உடைந்ததால் நீரில் மூழ்கி பலியான சோகம்!

நீச்சல் பழக கிணற்றில் இறங்கிய சிறுவன் உயிரிழப்பு
நீச்சல் பழக கிணற்றில் இறங்கிய சிறுவன் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே நீச்சல் பழகுவதற்காக கிணற்றில் இறங்கிய சிறுவன், முதுகில் கட்டி இருந்த பிளாஸ்டிக் கேன் உடைந்து நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள சானா குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் பெங்களூருவில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு க்ரிஷ் (12), சாய் (10) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். பள்ளி விடுமுறை என்பதால் இவர்களுக்கு சொந்தமான விவசாய கிணற்றில் கடந்த சில நாட்களாக பலரும் குளித்து வந்துள்ளனர்.

சம்பவம் நடந்த கிணறு
சம்பவம் நடந்த கிணறு

இந்த நிலையில், இன்று தனது நண்பர்களுடன் நீச்சல் பழகுவதற்காக க்ரிஷ் மற்றும் சாய் ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது சாய், நீச்சல் பழக வேண்டும் என ஆசைப்பட்டதால், மற்ற நண்பர்கள் அனைவரும் அவனது முதுகில் பிளாஸ்டிக் கேன் ஒன்றைக் கட்டி கிணற்றுக்குள் இறக்கியுள்ளனர். நீச்சல் பழகிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பிளாஸ்டிக் கேன் உடைந்துள்ளது. இதனால் சிறுவன் சாய் தண்ணீரில் மூழ்கியுள்ளான்.

பள்ளிப்பட்டு காவல் நிலையம்
பள்ளிப்பட்டு காவல் நிலையம்

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவனது நண்பர்கள் கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். அவர்கள் வந்து பார்த்தபோது சாய் கிணற்றுக்குள் முழுமையாக மூழ்கி இருந்தான். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவனை மீட்டு வெளியே கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால், அதற்கு முன்பாகவே சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பள்ளிப்பட்டு போலீஸார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்

மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!

பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கு... போர்ச்சுகல் நாட்டில் அன்மோல் பிஷ்னோய் பதுங்கலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in