பெங்களூருவில் தீப்பிடித்து எரியும் தனியார் பேருந்துகள்
பெங்களூருவில் தீப்பிடித்து எரியும் தனியார் பேருந்துகள்

பெங்களூருவில் அதிர்ச்சி... 10 தனியார் பேருந்துகள் எரிந்து நாசம்!

பெங்களூருவில் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்து வருவதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

பெங்களூருவின் வீரபத்ரா நகரில் தனியார் சொகுசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது பேருந்து ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, அடுத்தடுத்த பேருந்துகளுக்கும் தீ பரவியது. இதில் 5 முதல் 10 தனியார் பேருந்துகள் முற்றிலும் எரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீரபத்திராநகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்துகளில் தீவிபத்து
வீரபத்திராநகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்துகளில் தீவிபத்து

தீயை அணைப்பதற்காக 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. இதுவரை இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. மேலும் தீவிபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தும் தகவல் வெளியாகவில்லை. தீவிபத்து காரணமாக பேருந்து நிலையம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் பெங்களூருவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

10 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசம்
10 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசம்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in