வீட்டிற்குள் புகுந்தது 10 அடி நீள பாம்பு... அலறியடித்து ஓடிய மக்கள்!

வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பு மீட்பு
வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பு மீட்பு

திருச்சி அருகே வீட்டுக்குள் புகுந்த பத்து அடி நீள சாரைப்பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை எடுத்த மருதாபுரி அருகே துவரங்குறிச்சி திடீர் நகர் குடியிருப்பு பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு வீட்டின் அருகே சுற்றி திரிந்த பாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியே வந்து துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பு மீட்பு
வீட்டிற்குள் புகுந்த சாரைப்பாம்பு மீட்பு

உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், வீட்டிற்குள் புகுந்த 10 அடி நீள பாம்பை உபகரணங்கள் உதவியுடன் லாவகமாக பிடித்தனர். பிடிபட்ட பாம்பு விஷம் இல்லாத சாரைப்பாம்பு வகையைச் சேர்ந்தது என தீயணைப்பு துறையினர் அப்போது தெரிவித்தனர். இதையடுத்து அந்த பாம்பு பத்திரமாக வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. பாம்பு வீட்டிற்குள் புகுந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் வாசிக்கலாமே...


மிஸ் பண்ணாதீங்க ... ஆவின் தீபாவளி காம்போ ஆஃபர் அறிவிப்பு!

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வேன்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்!

நடிகை அமலாபால் 2வது திருமணம்... லிப் கிஸ் கொடுத்து காதலனை அறிமுகப்படுத்தினார்!

பகீர்... திமுக பிரமுகர் மகன் படுகொலை; சென்னையில் பரபரப்பு!

பிரபல நடிகையின் மகன் மர்ம மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in