மின்கசிவால் திடீரென பற்றி எரிந்த கடை; அலறியடித்து ஓடிய வாடிக்கையாளர்கள்... கோவையில் பரபரப்பு!

கோவையில் சோபா கடையில் பற்றி எரிந்த தீ
கோவையில் சோபா கடையில் பற்றி எரிந்த தீ

கோவையில் மின்கசிவு காரணமாக சோபா கடை ஒன்றில் திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்ததால் அருகாமை கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பரியல் கிரவுண்ட் பகுதியில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை, மின்னணு பாகங்கள் விற்பனை செய்யும் கடை, சோபா கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் டயமண்ட் அப்போல்ஸ்டரி என்ற சோபா கடையில் இன்று மதியம் கடையின் உரிமையாளர் சலீம் அமர்ந்திருந்த போது, திடீரென புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கோவையில் சோபா கடையில் பற்றி எரிந்த தீ
கோவையில் சோபா கடையில் பற்றி எரிந்த தீ

கடையினுள்ளே புகை எங்கே வருகிறது என அவர் பார்த்துக் கொண்டிருந்தபோதே, கடையில் இருந்த சோபாக்கள் திடீரென பற்றி எரியத் துவங்கியது. உடனடியாக அவர் கடையிலிருந்து வெளியேறிய நிலையில், மளமளவென பரவி கடை முழுவதும் பற்றி எரிந்தது. அப்போது அருகில் இருந்த உணவகத்திலும் தீ பரவியது. இதனால் அங்கிருந்த எரிவாயு சிலிண்டர்களை ஊழியர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அப்போது அருகாமை கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக நின்றிருந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கோவையில் சோபா கடையில் பற்றி எரிந்த தீ
கோவையில் சோபா கடையில் பற்றி எரிந்த தீ

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கடையில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சோபாக்கள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

இதையும் வாசிக்கலாமே...    

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!

கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!

ஆடுஜீவிதம் - சினிமா விமர்சனம்

மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in