தாய் திட்டியதால் வேதனை... நண்பர்களுக்கு போன் பேசி தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவன்!

தற்கொலை
தற்கொலைசெல்போனே கதி என இருந்த பிளஸ்1 மாணவி: பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து தற்கொலை

தாய் திட்டியதால் மனவேதனை அடைந்த மகன், நண்பர்களுக்கு போன் செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை திருவொற்றியூர் அப்பர் சாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜான் ராபர்ட். இவரது மகன் ஆண்ட்ரூஸ் (20). தனியார் கல்லூரியில் பி.எஸ்சி கெமிஸ்ட்ரி 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். இதனை அறிந்த தாய் கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அவர், நண்பர்களிடம் செல்போன் மூலம் தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு அறைக்குள் சென்று மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சந்தேகம் அடைந்த நண்பர்கள் உடனடியாக வீட்டிற்கு சென்று பார்த்த போது ஆண்ட்ரூஸ் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் ஆண்ட்ரூஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in