ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ராம்பன் பகுதியில் இன்று காலை பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் ராம்பன் உள்ள பேட்டரி சாஷ்மா பகுதியில் இன்று அதிகாலை 1.15 மணியளவில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்தது. ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு நோக்கி சென்றபோது இந்த கார் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் உள்ளூர் போலீஸார், மாநில பேரிடர் மீட்புப் படை (எஸ்டிஆர்எஃப்) மற்றும் ராம்பன் சிவில் விரைவு மீட்புக் குழுவினர் (கியூஆர்டி) ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
கொட்டும் மழைக்கு இடையே, பள்ளத்தாக்கில் இறந்து கிடந்த அனைவரின் சடலங்களும் மீட்கப்பட்டன. கார் ஓட்டுநரான ஜம்மு, அம்ப் க்ரோத்தாவைச் சேர்ந்த பல்வான் சிங் (47), பீகார் மாநிலம், மேற்கு சம்பாரனைச் சேர்ந்த விபின் முகியா பைராகாங் உள்பட 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தறந்தவர்கள் பெரும்பாலும் வேலைக்காக காஷ்மீரை நோக்கிச் சென்ற வெளி மாநில தொழிலாளர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்த சம்பவம் ஜம்மு மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!
தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!
அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!
பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!