
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் ஓட்டுநராக பணியாற்றி வந்த துரை நேற்று இரவு உயிரிழந்த சம்பவம் வைகோ மற்றும் மதிமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம், கடந்த பல ஆண்டுகளாக கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தவர் துரை. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், வைகோ சொந்தமாக அம்பாசிடர் கார் வைத்திருந்த காலத்திலிருந்து தற்போது ஃபார்ச்சூனர் கார் வரையிலும் அவருக்கு ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு துரை தனியாக ரியல் எஸ்டேட் தொழில் துவங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தனது நண்பர்களுடன் நேற்று இரவு திருநெல்வேலி மாவட்டம் இட்டேரி பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் அவர் பேசிக்கொண்டிருந்ததார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் திடீரென மயங்கி விழுந்தார். முகத்தில் காயங்களுடன் அவர் மயங்கிக் கிடப்பதாக துரையின் மகள் மற்றும் மருமகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் துரையை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு, அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்னிடம் நீண்ட காலமாக பணியாற்றி வந்த ஓட்டுநர் துரை உயிரிழந்த சம்பவம் வைகோவை பேரதிர்ச்சியில் தள்ளி இருக்கிறது. இன்று மதியம் நெல்லையில் நடைபெற உள்ள துரையின் இறுதிச் சடங்கில் வைகோ பங்கேற்பார் என மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் வாசிக்கலாமே...
நாளை மகாளய பட்ச அமாவாசை: இந்த விஷயங்களை மறக்காதீங்க!
நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி... ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்த வருஷம் கேம்பஸ் இன்டர்வியூ கிடையாது.. பிரபல ஐடி நிறுவனம் அறிவிப்பு!
செம மாஸ் அறிவிப்பு... இன்று மெட்ரோ ரயிலில் பயணிக்க கட்டணம் கிடையாது!