`எங்க நிம்மதியே போச்சு'- தட்டிக்கேட்ட 2-வது மனைவியின் மகனை குத்திக் கொன்ற தந்தை

`எங்க நிம்மதியே போச்சு'- தட்டிக்கேட்ட 2-வது மனைவியின் மகனை குத்திக் கொன்ற தந்தை

தட்டிக் கேட்ட மகனை தந்தை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அருகே வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (55). தனியார் கார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வரும் இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி கடலூரிலும், 2-வது மனைவி வீராம்பட்டினத்திலும் வசித்து வருகின்றனர். 2-வது மனைவி மகன் தினேஷ் (24) புதுச்சேரியில் உள்ள பாலிடெக்னிக்கில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கிருஷ்ணமூர்த்தி தனது 2-வது மனைவியுடன் வசித்து வந்தார். 2 மனைவிகள் என்பதால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் இருந்து வந்தன. நேற்றிரவு இரவு 2-வது மனைவி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தினேஷ், ஏன் இப்படி அடிக்கடி வீட்டில் சண்டை போடுகிறாய், நிம்மதியாகவே இருக்க முடியவில்லை என்று கூறி, தந்தை கிருஷ்ணமூர்த்தியை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி, கத்தியை எடுத்து மகன் தினேஷை சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே தினேஷ் உயிரிழந்தார். கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அரியாங்குப்பம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.